ஶ்ரீ:
ஶ்ரீமதே ராமானுஜாய நம:
ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகாய நம:
திருவரங்க³த்தமுத³னார் அருளிச்செய்த³
இராமானுஜ நூட்ரந்தா³தி³
தனியன்கள³்
முன்னை வினை அக³ல மூங்கி³ற்குடி³ அமுத³ன் ।
பொன்னம் கழற்கமல ப்போதி³ரண்டு³ம் ।
என்னுடை³ய சென்னிக்கணி ஆக³ ச்சேர்த்தினேன் ।
தென்பு³லத்தார்க்கென்னு க்கட³வுடை³யேன் யான்
நயம் தரு பேர் இன்ப³ம் எல்லாம் பழுதி³ன்றி நண்ணினர் பால் ।
சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாள் இணை மேல் ।
உயர்ந்த³ குணத்து த்திருவரங்க³த்தமுதோ³ங்கு³ம் அன்பா³ல் இயம்பு³ம் ।
கலித்துறை அந்தா³தி³ ஓத³ இசை நெஞ்ஜமே !
இனியென் குறை நமக்கெம் பெருமானார் திருனாமத்தால் ।
முனி தந்த³ நூட்ரெட்டு ச்சாவித்திரி என்னும் நுண்பொருளை ।
கனி தந்த³ செஞ்ஜொல் கலித்துறை அந்தா³தி³ பாடி³ த்தந்தா³ன் ।
புனித³ன் திருவரங்க³த்தமுதா³கி³ய புண்ணியனே
சொல்லின் தொகை³ கொண்டு³னத³டி³ ப்போது³க்கு த்தொண்டு³ செய்யும் ।
நல் அன்ப³ர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவின் உள்ளே ।
அல்லும் பக³லும் அமரும் படி³ நல்க³ரு சமயம் வெல்லும் பரம ।
இராமானுச ! இதெ³ன் விண்ணப்பமே
பூ மன்னு மாது³ பொருந்தி³ய மார்ப³ன் ।
புகழ³் மலிந்த³ பா மன்னு மாறன் ।
அடி³ பணிந்து³ய்ந்த³வன் ।
பல் கலையோர் தாம் மன்ன வந்த³ இராமானுசன் ।
சரணாரவிந்த³ம் நாம் மன்னி வாழ ।
நெஞ்ஜே ! சொல்லுவோம் அவன் நாமங்கள³ே ॥ 1 ॥
கள்ளார் பொழில் தென் அரங்க³ன் ।
கமல ப்பத³ங்கள³் நெஞ்ஜில் கொள்ளா ।
மனிசரை நீங்கி³ ।
குறையற்பிரான் அடி³க்கீழ்
விள்ளாத³ அன்ப³ன் இராமானுசன் ।
மிக்க சீலம் அல்லால் உள்ளாதெ³ன் நெஞ்ஜு ।
ஒன்றறியேன் எனக்குட்ர பேர் இயல்வே ॥ 2 ॥
பேர் இயல் நெஞ்ஜே ! ।
அடி³ பணிந்தே³ன் உன்னை ।
பேய் ப்பிறவி ப்பூரியரோடு³ள்ள சுட்ரம் புலத்தி ।
பொருவரும் சீர் ஆரியன் செம்மை
இராமானுச முனிக்கன்பு³ செய்யும் ।
சீரிய பேருடை³யார் ।
அடி³க்கீழ் என்னை ச்சேர்த்ததற³்கே ॥ 3 ॥
என்னை ப்புவியில் ஒரு பொருள் ஆக்கி ।
மருள் சுரந்த³ முன்னை ப்பழவினை ।
வேர் அருத்து ।
ஊழி முத³ல்வனையே பன்ன ப்பணித்த
இராமானுசன் பரன் பாத³மும் ।
என் சென்னி த்தரிக்க வைத்தான் ।
எனக்கேது³ம் சிதை³வில்லையே ॥ 4 ॥
எனக்குட்ர செல்வம் இராமானுசன் என்ரு ।
இசையகி³ல்லா மன க்குட்ர மாந்த³ர் ।
பழிக்கில் புகழ³் ।
அவன் மன்னிய சீர் தனக்குட்ர அன்ப³ர் அவன்
திருனாமங்கள³் சாட்ரும் என்பா³ ।
இன க்குட்ரம் காணகி³ல்லார் ।
பத்தி ஏய்ந்த³ இயல்விதெ³ன்றே ॥ 5 ॥
இயலும் பொருளும் இசைய த்தொடு³த்து ।
ஈன் கவிகள³் அன்பா³ல் மயல் கொண்டு³ வாழ்த்தும் ।
இராமானுசனை ।
மதி³ இன்மையால் பயிலும் கவிகள³ில்
பத்தி இல்லாத³ என் பாவி நெஞ்ஜால் ।
முயல்கி³ன்றனந் ।
அவன் தன் பெருங்கீ³ர்த்தி மொழிந்தி³ட³வே ॥ 6 ॥
மொழியை க்கட³க்கும் பெரும் புகழ³ான் ।
வஞ்ஜ முக்குரும்பா³ம் குழியை க்கட³க்கும் ।
நம் கூரத்தாழ்வான் சரண் கூடி³ய பின் ।
பழியை க்கட³த்தும் இராமானுசன் புகழ³் பாடி³ ।
அல்லா வழியை க்கட³த்தல் ।
எனக்கினி யாது³ம் வருத்தம் அன்றே ॥ 7 ॥
வருத்தும் புறவிருள் மாட்ர ।
எம் பொய்கை³ ப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் ।
செந்த³மிழ் தன்னையும் கூட்டி ।
ஒன்ற த்திரித்தன்றெரித்த திருவிளக்கை த்தன்
திருவுள்ளத்தே ।
இருத்தும் பரமன் ।
இராமானுசன் எம் இறையவனே ॥ 8 ॥
இறைவனை க்காணும் இத³யத்திருள் கெட³ ।
ஞானம் என்னும் நிறை விளக்கேட்ரிய ।
பூத³ த்திருவடி³ தாள்கள³் ।
நெஞ்ஜத்துறைய வைத்தாளும் இராமானுசன்
புகழ³் ஓது³ம் நல்லோர் ।
மறையினை க்காத்து ।
இந்த³ மண் அக³த்தே மன்ன வைப்பவரே ॥ 9 ॥
மன்னிய பேர் இருள் மாண்ட³ பின் ।
கோவலுள் மா மலராள் தன்னொடு³ மாயனை ।
கண்ட³மை காட்டும் ।
தமிழ் த்தலைவன் பொன் அடி³ போட்ரும்
இராமானுசற்கன்பு³ பூண்ட³வர் தாள் ।
சென்னியில் சூடு³ம் ।
திரு உடை³யார் என்ரும் சீரியரே ॥ 1௦ ॥
சீரிய நான்மறை ச்செம் பொருள் ।
செந்த³மிழால் அளித்த பார் இயலும் ।
புகழ³் பாண் பெருமாள் ।
சரணாம் பது³ம த்தார் இயல் சென்னி
இராமானுசன் தன்னை ச்சார்ந்த³வர் தம் ।
காரிய வண்மை ।
என்னால் சொல்லொணாதி³க்கட³ல் இட³த்தே ॥ 11 ॥
இட³ங்கொ³ண்ட³ கீர்த்தி மழிசைக்கிறைவன் ।
இணை அடி³ ப்போத³ட³ங்கு³ம் ।
இத³யத்திராமானுசன் ।
அம் பொற் பாத³ம் என்ரும் கட³ங்கொ³ண்டி³றைஞ்ஜும்
திரு முனிவர்க்கன்றி க்காத³ல் செய்யா ।
திட³ங்கொ³ண்ட³ ஞானியர்க்கே ।
அடி³யேன் அன்பு³ செய்வது³வே ॥ 12 ॥
செய்யும் பசுன் துளவ த்தொழில் மாலையும் ।
செந்த³மிழில் பெய்யும் ।
மறை த்தமிழ் மாலையும் ।
பேராத³ சீர் அரங்க³த்தையன் கழற்கணியும்
பரன் தாள் அன்றி ।
ஆத³ரியா மெய்யன் ।
இராமானுசன் சரணே க³தி வேறெனக்கே ॥ 13 ॥
கதிக்கு ப்பதற³ி ।
வெங்கா³னமும் கல்லும் கட³லும் எல்லாம் ।
கொதி³க்க த்தவஞ்ஜெய்யும் கொள்கை³ அட்ரேன் ।
கொல்லி காவலன் சொல் பதி³க்கும் கலை க்கவி
பாடு³ம் பெரியவர் பாத³ங்கள³ே ।
துதி³க்கும் பரமன் ।
இராமானுசன் என்னை ச்சோர்விலனே ॥ 14 ॥
சோராத³ காத³ல் பெருஞ்ஜுழிப்பால் ।
தொல்லை மாலை ஒன்ரும் பாராத³வனை ।
பல்லாண்டெ³ன்ரு காப்பிடு³ம் ।
பான்மையன் தாள் பேராத³ உள்ளத்திராமானுசன்
தன் பிறங்கி³ய சீர் ।
சாரா மனிசரை ச்சேரேன் ।
எனக்கென்ன தாழ்வினியே ॥ 15 ॥
தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து³ ।
தலமுழுது³ம் கலியே ஆள்கி³ன்ற நாள் வந்து³ ।
அளித்தவன் காண்மின் ।
அரங்க³ர் மௌலி சூழ்கி³ன்ற மாலையை ச்சூடி³ க்கொடு³த்தவள்
தொல் அருளால் ।
வாழ்கி³ன்ற வள்ளல் ।
இராமானுசன் என்னும் மா முனியே ॥ 16 ॥
முனியார் துயரங்கள³் முந்தி³லும் ।
இன்ப³ங்கள³் மொய்த்திடி³னும் கனியார் மனம் ।
கண்ண மங்கை³ நின்றானை ।
கலை பரவும் தனி ஆனையை த்தண்
தமிழ் செய்த³ நீலன் தனக்கு ।
உலகி³ல் இனியானை ।
எங்கள³் இராமானுசனை வந்தெ³ய்தி³னரே ॥ 17 ॥
எய்தற³்கரிய மறைகள³ை ।
ஆயிரம் இன் தமிழால் செய்தற³்குலகி³ல் வரும் ।
சட³கோ³ப³னை ।
சிந்தை³ உள்ளே பெய்தற³்கிசையும் பெரியவர்
சீரை உயிர்கள³் எல்லாம் ।
உய்தற³்குத³வும் ।
இராமானுசன் எம் உரு துணையே ॥ 18 ॥
உரு பெருஞ்ஜெல்வமும் தந்தை³யும் தாயும் ।
உயர் குருவும் வெறி தரு ।
பூமகள³் நாத³னும் ।
மாறன் விளங்கி³ய சீர் நெறி தரும் செந்த³மிழ்
ஆரணமே என்றின் நீள் நிலத்தோர் ।
அறித³ர நின்ற ।
இராமானுசன் எனக்கார் அமுதே³ ॥ 19 ॥
ஆர ப்பொழில் தென் குருகை³ ப்பிரான் ।
அமுத³ த்திருவாய் ஈர த்தமிழின் ।
இசை உணர்ந்தோ³ர்க³ட்கு ।
இனியவர் தம் சீரை ப்பயின்ருய்யும்
சீலங்கொ³ள் நாத³முனியை ।
நெஞ்ஜால் வாரி ப்பருகு³ம் ।
இராமானுசன் எந்த³ன் மா நிதி³யே ॥ 2௦ ॥
நிதி³யை ப்பொழியும் முகி³ல் என்ரு ।
நீசர் தம் வாசல் பட்ரி ।
துதி³ கட்ருலகி³ல் துவள்கி³ன்றிலேன் ।
இனி தூய் நெறி சேர் எதி³க³ட்கிறைவன்
யமுனை த்துறைவன் இணை அடி³யாம் ।
கதி³ பெட்ருடை³ய ।
இராமானுசன் என்னை க்காத்தனநே ॥ 21 ॥
கார்த்திகை³ யானும் கரிமுக³ த்தானும் ।
கனலும் முக்கண் மூர்த்தியும் ।
மோடி³யும் வெப்பும் முது³கி³ட்டு ।
மூவுலகு³ம் பூத்தவனே ! என்ரு போட்ரிட³
வாணன் பிழை பொருத்த ।
தீர்த்தனை ஏத்தும் ।
இராமானுசன் எந்த³ன் சேம வைப்பே ॥ 22 ॥
வைப்பாய வான் பொருள் என்ரு ।
நல் அன்ப³ர் மனத்தக³த்தே ।
எப்போது³ம் வைக்கும் இராமானுசனை ।
இரு நிலத்தில் ஒப்பார் இலாத³ உரு வினையேன்
வஞ்ஜ நெஞ்ஜில் வைத்து ।
முப்போது³ம் வாழ்த்துவன் ।
என்னாம் இது³ அவன் மொய் புகழ³்க்கே ॥ 23 ॥
மொய்த்த வென் தீவினையால் பல் உட³ல் தொரும் மூத்து ।
அத³னால் எய்த்தொழிந்தே³ன் ।
முனை நாள்கள³் எல்லாம் ।
இன்ரு கண்டு³யர்ந்தே³ன் பொய் த்தவம் போட்ரும்
புலை ச்சமயங்கள³் நிலத்தவிய ।
கைத்த மெய்ஞ்ஞானத்து ।
இராமானுசன் என்னும் கார் தன்னையே ॥ 24 ॥
கார் ஏய் கருணை இராமானுச ।
இக்கட³ல் இட³த்தில் ஆரே அறிப³வர் ।
நின் அருளின் தன்மை ।
அல்லலுக்கு நேரே உறைவிட³ம் நான் வந்து³
நீ என்னை உய்த்த பின் ।
உன் சீரே உயிர்க்குயிராய் ।
அடி³யேற்கின்ரு தித்திக்குமே ॥ 25 ॥
திக்குட்ர கீர்த்தி இராமானுசனை ।
என் செய் வினையாம் மெய் க்குட்ரம் நீக்கி ।
விளங்கி³ய மேக³த்தை ।
மேவு நல்லோர் எக்குட்ர வாளர் எது³
பிறப்பேதி³யல்வாக³ நின்றோர் ।
அக்குட்ரம் அப்பிறப்பு ।
அவ் இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே ॥ 26 ॥
கொள்ள க்குறைவட்ரிலங்கி³ ।
கொழுந்து³ விட்டோங்கி³ய உன் வள்ளல் தனத்தினால் ।
வல் வினையேன் மனம் நீ புகு³ந்தா³ய் ।
வெள்ளை ச்சுட³ர் விடு³ம் உன் பெரு
மேன்மைக்கிழுக்கிதெ³ன்ரு ।
தள் உட்ரிரங்கு³ம் ।
இராமானுச ! என் தனி நெஞ்ஜமே ! ॥ 27 ॥
நெஞ்ஜில் கறை கொண்ட³ கஞ்ஜனை க்காய்ந்த³ நிமலன் ।
நங்கள³் பஞ்ஜி த்திருவடி³ ।
பின்னை தன் காத³லன் ।
பாத³ம் நண்ணா வஞ்ஜர்க்கரிய இராமானுசன்
புகழ³் அன்றி என் வாய் ।
கொஞ்ஜி ப்பரவகி³ல்லாது³ ।
என்ன வாழ்வின்ரு கூடி³யதே³ ! ॥ 28 ॥
கூட்டும் விதி³ என்ரு கூடு³ங்கொ³லோ ।
தென் குருகை³ ப்பிரான் பாட்டென்னும் ।
வேத³ ப்பசுந்த³மிழ் தன்னை ।
தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
புகழ³் மெய் உணர்ந்தோ³ர் ।
ஈட்டங்கள³் தன்னை ।
என் நாட்டங்கள³் கண்டி³ன்ப³ம் எய்தி³ட³வே ॥ 29 ॥
இன்ப³ம் தரு பெரு வீடு³ வந்தெ³ய்தி³லென் ।
எண் இறந்த³ துன்ப³ம் தரு ।
நிரயம் பல சூழிலென் ।
தொல் உலகி³ல் மன் பல் உயிர்க³ட்கிறைவன்
மாயன் என மொழிந்த³ ।
அன்ப³ன் அனக³ன் ।
இராமானுசன் என்னை ஆண்ட³னநே ॥ 3௦ ॥
ஆண்டு³கள³் நாள் திங்கள³ாய் ।
நிகழ³் காலம் எல்லாம் மனமே ! ஈண்டு³ ।
பல் யோனிகள³் தோருழல்வோம் ।
இன்றோர் எண் இன்றியே காண் தகு³ தோள் அண்ணல்
தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ் ।
பூண்ட³ அன்பா³ளன் ।
இராமானுசனை ப்பொருந்தி³னமே ॥ 31 ॥
பொருந்தி³ய தேசும் பொறையும் திறலும் புகழ³ும் ।
நல்ல திருந்தி³ய ஞானமும் ।
செல்வமும் சேரும் ।
செரு கலியால் வருந்தி³ய ஞாலத்தை வண்மையினால் ।
வந்தெ³டு³த்தளித்த அருந்த³வன் ।
எங்கள³் இராமானுசனை அடை³ப³வர்க்கே ॥ 32 ॥
அடை³யார் கமலத்தலர்மகள³் கேள்வன் ।
கை ஆழி என்னும் படை³யோடு³ நாந்த³க³மும் ।
பட³ர் தண்டு³ம் ।
ஒண் சார்ங்க³ வில்லும் புடை³ ஆர் புரி சங்க³மும் ।
இந்த³ ப்பூத³லம் காப்பதற³்கென்றிடை³யே ।
இராமானுச முனி ஆயின இன்னிலத்தே ॥ 33 ॥
நிலத்தை ச்செருத்துண்ணும் நீச க்கலியை ।
நினைப்பரிய பலத்தை ச்செருத்தும் ।
பிறங்கி³யதி³ல்லை ।
என் பெய் வினை தென் புலத்தில்
பொறித்தவ ப்புத்தக³ ச்சும்மை பொருக்கிய பின் ।
நலத்தை ப்பொருத்தது³ ।
இராமானுசன் தன் நய ப்புகழ³ே ॥ 34 ॥
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே ।
சில மானிட³த்தை ப்புயலே என ।
கவி போட்ரி செய்யேன் ।
பொன் அரங்க³ம் என்னில் மயலே பெருகு³ம் இராமானுசன் ।
மன்னு மா மலர்த்தாள் அயரேன் ।
அருவினை என்னை எவ்வாறின்றட³ர்ப்பது³வே ॥ 35 ॥
அட³ல் கொண்ட³ நேமியன் ஆர் உயிர் நாத³ன் ।
அன்றாரண ச்சொற்கட³ல் கொண்ட³ ।
ஒண் பொருள் கண்டள³ிப்ப ।
பின்னும் காசினியோர் இட³ரின் கண்
வீழ்ந்தி³ட³ த்தானும் அவ் ஒண் பொருள் கொண்டு³ ।
அவர் பின் பட³ரும் குணன் ।
எம் இராமானுசன் தன் படி³ இது³வே ॥ 36 ॥
படி³ கொண்ட³ கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் ।
குடி³ கொண்ட³ கோயில் ।
இராமானுசன் குணம் கூரும் ।
அன்ப³ர் கடி³ கொண்ட³ மா மலர் த்தாள்
கலந்து³ள்ளம் கனியும் நல்லோர் ।
அடி³ கண்டு³ கொண்டு³க³ந்து³ ।
என்னையும் ஆளவர் க்காக்கினரே ॥ 37 ॥
ஆக்கி அடி³மை நிலைப்பித்தனை என்னை இன்ரு ।
அவமே போக்கி ப்புறத்திட்டது³ ।
என் பொருளா முன்பு³ ।
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுச !
நின் அருளின் வண்ணம் ।
நோக்கில் தெரிவரிதா³ல் ।
உரையாய் இந்த³ நுண் பொருளே ॥ 38 ॥
பொருளும் புத³ல்வரும் பூமியும் ।
பூங்கு³ழலாரும் என்றே மருள் கொண்டி³ளைக்கும் ।
நமக்கு நெஞ்ஜே ! ।
மட்ருளார் தரமோ இருள் கொண்ட³ வென் துயர்
மாட்ரி த்தன் ஈறில் பெரும் புகழ³ே ।
தெருளும் தெருள் தந்து³ ।
இராமானுசன் செய்யும் சேமங்கள³ே ॥ 39 ॥
சேம நல் வீடு³ம் பொருளும் தருமமும் ।
சீரிய நற்காமமும் ।
என்றிவை நான்கெ³ன்ப³ர் ।
நான்கி³னும் கண்ணனுக்கே ஆமது³ காமம்
அறம் பொருள் வீடி³தற³்கென்ருரைத்தான் ।
வாமனந் சீலன் ।
இராமானுசன் இந்த³ மண் மிசையே ॥ 4௦ ॥
மண்மிசை யோனிகள³் தோரும் பிறந்து³ ।
எங்கள³் மாத³வனே கண்ணுற நிற்கிலும் ।
காணகி³ல்லா ।
உலகோ³ர்கள³் எல்லாம் அண்ணல் இராமானுசன்
வந்து³ தோன்றிய அப்பொழுதே³ ।
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு³ ।
நாரணற்காயினரே ॥ 41 ॥
ஆய் இழையார் கொங்கை³ தங்கு³ம் ।
அ க்காத³ல் அளட்ரழுந்தி³ மாயும் என் ஆவியை ।
வந்தெ³டு³த்தான் இன்ரு ।
மா மலராள் நாயக³ன் எல்லா உயிர்க³ட்கும் நாத³ன் ।
அரங்க³ன் என்னும் தூயவன் ।
தீதி³ல் இராமானுசன் தொல் அருள் சுரந்தே³ ॥ 42 ॥
சுரக்கும் திருவும் உணர்வும் ।
சொலப்புகி³ல் வாய் அமுத³ம் பரக்கும் ।
இரு வினை பட்ரற ஓடு³ம் ।
படி³யில் உள்ளீர் உரைக்கின்றனந்
உமக்கு யான் அறம் சீரும் உரு கலியை ।
துரக்கும் பெருமை ।
இராமானுசன் என்ரு சொல்லுமினே ॥ 43 ॥
சொல்லார் தமிழ் ஒரு மூன்ரும் ।
சுருதி³கள³் நான்கு³ம் எல்லை இல்லா ।
அறனெறி யாவும் தெரிந்த³வன் ।
எண் அருஞ்சீர் நல்லார் பரவும் இராமானுசன்
திருனாமம் நம்பி³ ।
கல்லார் அக³ல் இட³த்தோர் ।
எது³ பேறென்ரு காமிப்பரே ॥ 44 ॥
பேறொன்ரு மட்ரில்லை நின் சரண் அன்றி ।
அ ப்பேறளித்தற்காறொன்ரும் இல்லை ।
மட்ர ச்சரண் அன்றி ।
என்றி ப்பொருளை த்தேரும் அவர்க்கும் எனக்கும்
உனை த்தந்த³ செம்மை சொல்லால் ।
கூரும் பரம் அன்ரு ।
இராமானுச மெய்ம்மை கூறிடி³லே ॥ 45 ॥
கூரும் சமயங்கள³் ஆரும் குலைய ।
குவலயத்தே மாறன் பணித்த ।
மறை உணர்ந்தோ³னை ।
மதி³யிலியேன் தேரும் படி³
என் மனம் புகு³ந்தா³னை ।
திசை அனைத்தும் ஏரும் குணனை ।
இராமானுசனை இறைஞ்ஜினமே ॥ 46 ॥
இறைஞ்ஜ ப்படு³ம் பரன் ஈசன் அரங்க³ன் என்ரு ।
இவ்வுலக³ த்தறம் செப்பும் ।
அண்ணல் இராமானுசன் ।
என் அருவினையின் திறம் செட்ரிரவும்
பக³லும் விடா³தெ³ந்த³ன் சிந்தை³யுள்ளே ।
நிறைந்தொ³ப்பற இருந்தா³ன் ।
எனக்காரும் நிக³ர் இல்லையே ! ॥ 47 ॥
நிக³ர் இன்றி நின்ற என் நீசதை³க்கு ।
நின் அருளின் கண் அன்றி ப்புக³ல் ஒன்ரும் இல்லை ।
அருட்கும் அக்³தே புக³ல் ।
புன்மையிலோர் பக³ரும் பெருமை இராமானுச !
இனி நாம் பழுதே³ ।
அக³லும் பொருள் என் ।
பயன் இருவோமுக்கும் ஆன பின்னே ॥ 48 ॥
ஆனது³ செம்மை அறனெறி ।
பொய்ம்மை அரு சமயம் போனது³ பொன்றி ।
இறந்த³து³ வெங்க³லி ।
பூங்க³மல த்தேன் நதி³ பாய் வயல்
தென் அரங்க³ன் கழல் சென்னி வைத்து ।
தான் அதி³ல் மன்னும் ।
இராமானுசன் இத்தலத்துதி³த்தே ॥ 49 ॥
உதி³ப்பன உத்தமர் சிந்தை³யுள் ।
ஒன்னலர் நெஞ்ஜமஞ்ஜி க்கொதி³த்திட³ ।
மாறி நட³ப்பன ।
கொள்ளை வன் குட்ரம் எல்லாம் பதி³த்த என் புன்
கவி ப்பாவினம் பூண்ட³ன பாவு தொல் சீர் ।
எதி³ த்தலை நாத³ன் ।
இராமானுசன் தன் இணை அடி³யே ॥ 5௦ ॥
அடி³யை த்தொட³ர்ந்தெ³ழும் ஐவர்க³ட்காய் ।
அன்ரு பாரத ப்போர் முடி³ய ।
பரி நெடு³ன் தேர் விடு³ங்கோ³னை ।
முழுது³ணர்ந்த³ அடி³யர்க்கமுத³ம் இராமானுசன்
என்னை ஆள வந்து³ ।
இப்படி³யில் பிறந்த³து³ ।
மட்ரில்லை காரணம் பார்த்திடி³லே ॥ 51 ॥
பார்த்தான் அரு சமயங்கள³் பதை³ப்ப ।
இப்பார் முழுது³ம் போர்த்தான் புகழ³் கொண்டு³ ।
புன்மையினேன் இடை³ த்தான் புகு³ந்து³ ।
தீர்த்தான் இரு வினை தீர்த்தரங்க³ன் செய்ய ।
தாள் இணையோடா³ர்த்தான் ।
இவை எம் இராமானுசன் செய்யும் அற்புத³மே ॥ 52 ॥
அற்புத³ன் செம்மை இராமானுசன் ।
என்னை ஆள வந்த³ கற்பக³ம் ।
கட்ரவர் காமுரு சீலன் ।
கருத³ரிய பற்பல் உயிர்கள³ும்
பல் உலகு³ யாவும் பரனதெ³ன்னும் ।
நற்பொருள் தன்னை ।
இன் நானிலத்தே வந்து³ நாட்டினநே ॥ 53 ॥
நாட்டிய நீச ச்சமயங்கள³் மாண்ட³ன ।
நாரணனை க்காட்டிய வேத³ம் ।
களிப்புட்ரது³ ।
தென் குருகை³ வள்ளல் வாட்டம்
இலா வண் தமிழ் மறை வாழ்ந்த³து³ ।
மண் உலகி³ல் ஈட்டிய சீலத்து ।
இராமானுசன் தன் இயல்வு கண்டே³ ॥ 54 ॥
கண்ட³வர் சிந்தை³ கவரும் ।
கடி³ பொழில் தென் அரங்க³ன் ।
தொண்ட³ர் குலாவும் இராமானுசனை ।
தொகை³ இறந்த³ பண் தரு வேத³ங்கள³் பார்மேல்
நிலவிட³ ப்பார்த்தருளும் ।
கொண்ட³லை மேவி த்தொழும் ।
குடி³யாம் எங்கள³் கோக்குடி³யே ॥ 55 ॥
கோ க்குல மன்னரை மூவெழு கால் ।
ஒரு கூர் மழுவால் போக்கிய தேவனை ।
போட்ரும் புனித³ன் ।
புவனம் எங்கு³ம் ஆக்கிய கீர்த்தி
இராமானுசனை அடை³ந்த³ பின் ।
என் வாக்குரையாது³ ।
என் மனம் நினையாதி³னி மட்ரொன்றையே ॥ 56 ॥
மட்ரொரு பேரு மதி³யாது³ ।
அரங்க³ன் மலர் அடி³க்காள் உட்ரவரே ।
தனக்குட்ரவரா க்கொள்ளும் உத்தமனை ।
நட்ரவர் போட்ரும் இராமானுசனை ।
இன் நானிலத்தே பெட்ரனந் ।
பெட்ர பின் மட்ரறியேன் ஒரு பேதை³மையே ॥ 57 ॥
பேதை³யர் வேத³ ப்பொருள் இதெ³ன்ருன்னி ।
பிரமம் நன்றென்றோதி³ ।
மட்ரெல்லா உயிரும் அக்³தென்ரு ।
உயிர்கள³் மெய்விட்டாதி³ ப்பரனோடொ³ன்றாம்
என்ரு சொல்லும் அவ்வல்லல் எல்லாம் ।
வாதி³ல் வென்றான் ।
எம் இராமானுசன் மெய்ம் மதி³க்கட³லே ॥ 58 ॥
கட³ல் அளவாய திசை எட்டின் உள்ளும் ।
கலி இருளே மிடை³ தரு காலத்து ।
இராமானுசன் ।
மிக்க நான்மறையின் சுட³ர் ஒளியால்
அவ் இருளை த்துரந்தி³லனேல் ।
உயிரை உடை³யவன் ।
நாரணன் என்றறிவார் இல்லை உட்ருணர்ந்தே³ ॥ 59 ॥
உணர்ந்த³ மெய்ஞ்ஞானியர் யோக³ம் தொரும் ।
திருவாய் மொழியின் மணம் தரும் ।
இன்னிசை மன்னும் இட³ந்தொ³ரும் ।
மாமலராள் புணர்ந்த³ பொன் மார்ப³ன் பொருந்து³ம்
பதி³ தொரும் புக்கு நிற்கும் ।
குணம் திகழ³் கொண்ட³ல் ।
இராமானுசன் எங்கு³ல க்கொழுந்தே³ ॥ 6௦ ॥
கொழுந்து³ விட்டோடி³ ப்பட³ரும் வெங்கோ³ள் வினையால் ।
நிரயத்தழுந்தி³ இட்டேனை ।
வந்தா³ட் கொண்ட³ பின்னும் ।
அரு முனிவர் தொழும் தவத்தோன் எம் இராமானுசன் ।
தொல் புகழ³் சுட³ர் மிக்கெழுந்த³து³ ।
அத்தால் நல் அதி³சயம் கண்ட³தி³ரு நிலமே ॥ 61 ॥
இருந்தே³ன் இரு வினை ப்பாசம் கழட்ரி ।
இன்ரு யான் இறையும் வருந்தே³ன் ।
இனி எம் இராமானுசன் ।
மன்னு மாமலர் த்தாள் பொருந்தா³ நிலை
உடை³ ப்புன்மையினோர்க்கொன்ரும் நன்மை செய்யா ।
பெருன் தேவரை ப்பரவும் ।
பெரியோர் தம் கழல் பிடி³த்தே ॥ 62 ॥
பிடி³யை த்தொட³ரும் களிறென்ன ।
யான் உன் பிறங்கி³ய சீர் அடி³யை த்தொட³ரும் படி³ ।
நல்க³ வேண்டு³ம் ।
அரு சமயச்செடி³யை த்தொட³ரும் மருள்
செறிந்தோ³ர் சிதை³ந்தோ³ட³ வந்து³ ।
இப்படி³யை த்தொட³ரும் ।
இராமானுச ! மிக்க பண்டி³த³னே ! ॥ 63 ॥
பண் தரு மாறன் பசுந்த³மிழ் ।
ஆனந்த³ம் பாய் மத³மாய் விண்டி³ட³ ।
எங்கள³் இராமானுச முனி வேழம் ।
மெய்ம்மை கொண்ட³ நல் வேத³ க்கொழுந்த³ண்ட³ம்
ஏந்தி³ க்குவலயத்தே ।
மண்டி³ வந்தே³ன்றது³ ।
வாதி³யர்கா³ள் ! உங்கள³் வாழ்வட்ரதே³ ॥ 64 ॥
வாழ்வட்ரது³ தொல்லை வாதி³யர்க்கு ।
என்ரும் மறையவர் தம் தாழ்வட்ரது³ ।
தவம் தாரணி பெட்ரது³ ।
தத்துவ நூல் கூழ் அட்ரது³ குட்ரம் எல்லாம்
பதி³த்த குணத்தினர்க்கு ।
அன் நாழ் அட்ரது³ ।
நம் இராமானுசன் தந்த³ ஞானத்திலே ॥ 65 ॥
ஞானம் கனிந்த³ நலங்கொ³ண்டு³ ।
நாள் தொரும் நைப³வர்க்கு ।
வானம் கொடு³ப்பது³ மாத³வன் ।
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடி³ந்த³
இராமானுசன் தன்னை எய்தி³னர்க்கு ।
அத்தானம் கொடு³ப்பது³ ।
தன் தக³வென்னும் சரண் கொடு³த்தே ॥ 66 ॥
சரணம் அடை³ந்த³ தருமனுக்கா ।
பண்டு³ நூட்ருவரை ।
மரணம் அடை³வித்த மாயவன் ।
தன்னை வணங்க³ வைத்த கரணம் இவை
உமக்கன்றென்றி இராமானுசன் ।
உயிர்க³ட் கரண் அங்க³மைத்திலனேல் ।
அரணார் மட்ரிவ்வார் உயிர்க்கே ॥ 67 ॥
ஆர் எனக்கின்ரு நிக³ர் சொல்லில் ।
மாயன் அன்றைவர் தெய்வ த்தேரினில் ।
செப்பிய கீதை³யின் ।
செம்மை ப்பொருள் தெரிய ப்பாரினில் சொன்ன
இராமானுசனை பணியும் நல்லோர் ।
சீரினில் சென்ரு பணிந்த³து³ ।
என் ஆவியும் சிந்தை³யுமே ॥ 68 ॥
சிந்தை³யினோடு³ கரணங்கள³் யாவும் சிதை³ந்து³ ।
முன்னாள் அந்த³ம் உட்ரு ।
ஆழ்ந்த³து³ கண்டு³ ।
அவை என் தனக்கன்றருளால் தந்த³
அரங்க³னும் தன் சரண் தந்தி³லன் ।
தான் அது³ தந்து³ ।
எந்தை³ இராமானுசன் வந்தெ³டு³த்தனந் இன்றென்னையே ॥ 69 ॥
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து ।
எண்ணில் பல் குணத்த உன்னையும் பார்க்கில் ।
அருள் செய்வதே³ நலம் ।
அன்றி என் பால் பின்னையும் பார்க்கில்
நலம் உளதே³ உன் பெருங்க³ருணை ।
தன்னை என் பார்ப்பர் ।
இராமானுச ! உன்னை ச்சார்ந்த³வரே ॥ 7௦ ॥
சார்ந்த³தெ³ன் சிந்தை³ உன் தாள் இணைக்கீழ் ।
அன்பு³ தான் மிக³வும் கூர்ந்த³து³ ।
அ த்தாமரை த்தாள்கள³ுக்கு ।
உந்த³ன் குணங்கள³ுக்கே தீர்ந்த³தெ³ன்
செய்கை³ முன் செய்வினை நீ செய்வினை ।
அத³னால் பேர்ந்த³து³ ।
வண்மை இராமானுச ! எம் பெருன் தகை³யே ॥ 71 ॥
கைத்தனந் தீய சமய க்கலக³ரை ।
காசினிக்கே உய்த்தனந் ।
தூய மறை நெறி தன்னை ।
என்ருன்னி உள்ளம் நெய்த்த அன்போ³டி³ருந்தே³த்தும்
நிறை புகழ³ோருட³னே ।
வைத்தனந் என்னை ।
இராமானுசன் மிக்க வண்மை செய்தே³ ॥ 72 ॥
வண்மையினாலும் தன் மா தக³வாலும் ।
மதி³ புரையும் தண்மையினாலும் ।
இ த்தாரணியோர்க³ட்கு ।
தான் சரணாய் உண்மை நல் ஞானம்
உரைத்த இராமானுசனை உன்னும் ।
திண்மை அல்லால் எனக்கில்லை ।
மட்ரோர் நிலை தேர்ந்தி³டி³லே ॥ 73 ॥
தேரார் மறையின் திறம் என்ரு ।
மாயவன் தீயவரை ।
கூர் ஆழி கொண்டு³ குறைப்பது³ ।
கொண்ட³ல் அனைய வண்மை ஏரார்
குணத்தெம் இராமானுசன் ।
அவ்வெழில் மறையில் சேராத³வரை ச்சிதை³ப்பது³ ।
அப்போதொ³ரு சிந்தை³ செய்தே³ ॥ 74 ॥
செய்த்தலை ச்சங்க³ம் செழு முத்தம் ஈனும் ।
திருவரங்க³ர் கைத்தலத்தாழியும் ।
சங்க³மும் ஏந்தி³ ।
நங்க³ண் முக³ப்பே மொய்த்தலைத்துன்னை விடே³ன்
என்றிருக்கிலும் நின் புகழ³ே ।
மொய்த்தலைக்கும் வந்து³ ।
இராமானுச ! என்னை முட்ரும் நின்றே ॥ 75 ॥
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் ।
நிறை வேங்க³ட³ ப்பொற்குன்றமும் ।
வைகு³ந்த³ நாடு³ம் குலவிய பாற்கட³லும் ।
உந்த³னக்கெத்தனை இன்ப³ம் தரும்
உன் இணை மலர் த்தாள் ।
என் தனக்கும் அது³ ।
இராமானுச ! இவை ஈந்த³ருளே ॥ 76 ॥
ஈந்த³னந் ஈயாத³ இன் அருள் ।
எண்ணில் மறை க்குரும்பை³ ப்பாய்ந்த³னந் ।
அம்மறை ப்பல் பொருளால் ।
இ ப்படி³ அனைத்தும் ஏய்ந்த³னந்
கீர்த்தியினால் என் வினைகள³ை ।
வேர் பறிய க்காய்ந்த³னந் ।
வண்மை இராமானுசற்கென் கருத்தினியே ॥ 77 ॥
கருத்தில் புகு³ந்து³ள்ளில் கள்ளம் கழட்ரி ।
கருத³ரிய வருத்தத்தினால் ।
மிக³ வஞ்ஜித்து ।
நீ இந்த³ மண் அக³த்தே திருத்தி த்திருமகள³்
கேள்வனுக்காக்கிய பின் ।
என்னெஞ்ஜில் பொருத்த ப்படா³து³ ।
எம் இராமானுச ! மட்ரோர் பொய் ப்பொருளே ॥ 78 ॥
பொய்யை ச்சுரக்கும் பொருளை த்துறந்து³ ।
இந்த³ ப்பூத³லத்தே மெய்யை ப்புரக்கும் ।
இராமானுசன் நிற்க ।
வேரு நம்மை உய்ய க்கொள்ள வல்ல தெய்வம்
இங்கு³ யாதெ³ன்ருலர்ந்த³வமே ।
ஐயப்படா³ நிற்பர் ।
வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே³ ॥ 79 ॥
நல்லார் பரவும் இராமானுசன் ।
திருனாமம் நம்ப³ வல்லார் திறத்தை ।
மறவாத³வர்கள³் எவர் ।
அவர்க்கே எல்லா இட³த்திலும் என்ரும்
எப்போதி³லும் எ த்தொழும்பு³ம் ।
சொல்லால் மனத்தால் ।
கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே ॥ 8௦ ॥
சோர்வின்றி உன் தன் துணை அடி³ க்கீழ் ।
தொண்டு³ பட்டவர் பால் ।
சார்வின்றி நின்ற எனக்கு ।
அரங்க³ன் செய்ய தாள் இணைகள³்
பேர்வின்றி இன்ரு பெருத்தும் இராமானுச ! ।
இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு ।
இல்லை மாரு தெரிவுறிலே ॥ 81 ॥
தெரிவுட்ர ஞானம் செறிய ப்பெறாது³ ।
வென் தீவினையால் உருவட்ர ஞானத்து ।
உழல்கி³ன்ற என்னை ।
ஒரு பொழுதி³ல் பொருவட்ர கேள்வியன்
ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ ! ।
தெரிவுட்ர கீர்த்தி ।
இராமானுசன் என்னும் சீர் முகி³லே ॥ 82 ॥
சீர் கொண்டு³ பேர் அறம் செய்து³ ।
நல் வீடு³ செறிது³ம் என்னும் பார் கொண்ட³ மேன்மையர் ।
கூட்டன் அல்லேன் ।
உன் பத³ யுக³மாம் ஏர் கொண்ட³ வீட்டை
எளிதி³னில் எய்து³வன் ।
உன்னுடை³ய கார் கொண்ட³ வண்மை ।
இராமானுச ! இது³ கண்டு³ கொள்ளே ॥ 83 ॥
கண்டு³ கொண்டே³ன் எம் இராமானுசன் தன்னை ।
காண்ட³லுமே தொண்டு³ கொண்டே³ன் ।
அவன் தொண்ட³ர் பொட்ராளில் ।
என் தொல்லை வென்னோய் விண்டு³ கொண்டே³ன்
அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடு³த்து ।
இன்ருண்டு³ கொண்டே³ன் ।
இன்னம் உட்ரன ஓதி³ல் உலப்பில்லையே ॥ 84 ॥
ஓதி³ய வேத³த்தின் உட்பொருளாய் ।
அத³ன் உச்சி மிக்க சோதி³யை ।
நாத³ன் என அறியாது³ழல்கி³ன்ற தொண்ட³ர் ।
பேதை³மை தீர்த்த இராமானுசனை த்தொழும் பெரியோர் ।
பாத³ம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு ।
யாதொ³ன்ரும் பட்ரில்லையே ॥ 85 ॥
பட்ரா மனிசரை ப்பட்ரி ।
அப்பட்ரு விடா³த³வரே உட்ரார் என உழன்ரு ।
ஓடி³ நையேன் இனி ।
ஒள்ளிய நூல் கட்ரார் பரவும் இராமானுசனை ।
கருது³ம் உள்ளம் பெட்ரார் எவர் ।
அவர் எம்மை நின்றாளும் பெரியவரே ॥ 86 ॥
பெரியவர் பேசிலும் பேதை³யர் பேசிலும் ।
தன் குணங்க³ட்குரியசொல் என்ரும் ।
உடை³யவன் என்றென்ரு ।
உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
இராமானுசன் மறை தேர்ந்து³லகி³ல் ।
புரியும் நல் ஞானம் ।
பொருந்தா³த³வரை ப்பொரும் கலியே ॥ 87 ॥
கலி மிக்க சென்னெல் கழனி க்குறையல் ।
கலை ப்பெருமான் ஒலிமிக்க பாட³லை உண்டு³ ।
தன் உள்ளம் தடி³த்து ।
அத³னால் வலி மிக்க சீயம்
இராமானுசன் மறை வாதி³யராம் ।
புலி மிக்கதெ³ன்ரு ।
இப்புவனத்தில் வந்த³மை போட்ருவனே ॥ 88 ॥
போட்ரரும் சீலத்திராமானுச ।
நின் புகழ³் தெரிந்து³ சாட்ருவனேல் ।
அது³ தாழ்வது³ தீரில் ।
உன் சீர் தனக்கோர் ஏட்ரம்
என்றே கொண்டி³ருக்கிலும் ।
என் மனம் ஏத்தி அன்றி ஆட்ரகி³ல்லாது³ ।
இதற³்கென் நினைவாய் என்றிட்டஞ்ஜுவனே ॥ 89 ॥
நினையார் பிறவியை நீக்கும் பிரானை ।
இன் நீள் நிலத்தே எனை ஆள வந்த³ ।
இராமானுசனை ।
இருங்க³விகள³் புனையார் புனையும்
பெரியவர் தாள்கள³ில் ।
பூந்தொ³டை³யல் வனையார் ।
பிறப்பில் வருந்து³வர் மாந்த³ர் மருள் சுரந்தே³ ॥ 9௦ ॥
மருள் சுரந்தா³க³ம வாதி³யர் கூரும் ।
அவ ப்பொருளாம் இருள் சுரந்தெ³ய்த்த ।
உலகி³ருள் நீங்க³ ।
தன் ஈண்டி³ய சீர் அருள் சுரந்தெ³ல்லா
உயிர்க³ட்கும் நாத³ன் ।
அரங்க³ன் என்னும் பொருள் சுரந்தா³ன் ।
எம் இராமானுசன் மிக்க புண்ணியனே ॥ 91 ॥
புண்ணிய நோன்பு³ புரிந்து³ம் இலேன் ।
அடி³ போட்ரி செய்யும் நுண் அருங்கே³ள்வி ।
நுவன்ரும் இலேன் ।
செம்மை நூற் புலவர் க்கெண் அருங்கீ³ர்த்தி
இராமானுச ! இன்ரு நீ புகு³ந்து³ ।
என் கண் உள்ளும் நெஞ்ஜுள்ளும் ।
நின்ற இ க்காரணம் கட்டுரையே ॥ 92 ॥
கட்ட ப்பொருளை மறை ப்பொருள் என்ரு ।
கயவர் சொல்லும் பெட்டை க்கெடு³க்கும் ।
பிரான் அல்லனே ।
என் பெரு வினையை க்கிட்டி க்கிழங்கொ³டு³
தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி ।
வெட்டி க்களைந்த³ ।
இராமானுசன் என்னும் மெய்த்தவனே ॥ 93 ॥
தவம் தரும் செல்வம் தக³வும் தரும் ।
சலியா ப்பிறவி ப்பவம் தரும் ।
தீவினை பாட்ரி த்தரும் ।
பரந்தா³மம் என்னும் திவம் தரும் தீதி³ல்
இராமானுசன் தன்னை ச்சார்ந்த³வர்க³ட்கு ।
உவந்த³ருந்தே³ன் ।
அவன் சீர் அன்றி யான் ஒன்ரும் உள் மகி³ழ்ந்தே³ ॥ 94 ॥
உண்ணின்ருயிர்கள³ுக்குட்ரனவே செய்து³ ।
அவர்க்குயவே பண்ணும் பரனும் ।
பரிவிலன் ஆம் படி³ ।
பல் உயிர்க்கும் விண்ணின் தலை நின்ரு
வீடள³ிப்பான் எம் இராமானுசன் ।
மண்ணின் தலத்துதி³த்து ।
உய்மறை நாலும் வளர்த்தனநே ॥ 95 ॥
வளரும் பிணி கொண்ட³ வல் வினையால் ।
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு ।
கிடை³த்தறியாது³ ।
முடை³த்தலை ஊன் தளரும் அளவும் தரித்தும்
விழுந்து³ம் தனி திரிவேற்கு ।
உளர் எம் இறைவர் ।
இராமானுசன் தன்னை உட்ரவரே ॥ 96 ॥
தன்னை உட்ராட்செய்யும் தன்மையினோர் ।
மன்னு தாமரை த்தாள் தன்னை உட்ராட்செய்ய ।
என்னை உட்ரான் இன்ரு ।
தன் தக³வால் தன்னை உட்ரார் அன்றி த்தன்மை
உட்ரார் இல்லை என்றறிந்து³ ।
தன்னை உட்ராரை ।
இராமானுசன் குணம் சாட்ரிடு³மே ॥ 97 ॥
இடு³மே இனிய சுவர்க்கத்தில் ।
இன்னும் நரகி³ல் இட்டு ச்சுடு³மே ।
அவட்ரை தொட³ர் தரு தொல்லை ।
சுழல் பிறப்பில் நடு³மே இனி நம்
இராமானுசன் நம்மை நம் வசத்தே ।
விடு³மே சரணம் என்றால் ।
மனமே ! நையல் மேவுதற³்கே ॥ 98 ॥
தற்க ச்சமணரும் சாக்கிய ப்பேய்கள³ும் ।
தாழ் சடை³யோன் சொற்கட்ர சோம்ப³ரும் ।
சூனிய வாத³ரும் ।
நான்மறையும் நிற்க க்குரும்பு³ செய்
நீசரும் மாண்ட³னர் ।
நீள் நிலத்தே பொற்கற்பக³ம் ।
எம் இராமானுச முனி போந்த³ பின்னே ॥ 99 ॥
போந்த³தெ³ன் நெஞ்ஜென்னும் பொன் வண்டு³ ।
உனத³டி³ ப்போதி³ல் ஒண் சீராம் தெளி தேன் உண்டு³ ।
அமர்ந்தி³ட³ வேண்டி³ ।
நின் பால் அது³வே ஈந்தி³ட³ வேண்டு³ம் இராமானுச ! ।
இது³ அன்றி ஒன்ரும் மாந்த³ கில்லாது³ ।
இனி மட்ரொன்ரு காட்டி மயக்கிட³லே ॥ 1௦௦ ॥
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு³ ।
மதி³ மயங்கி³ த்துயக்கும் பிறவியில் ।
தோன்றிய என்னை ।
துயர் அக³ட்ரி உயக்கொண்டு³ நல்கு³ம்
இராமானுச ! என்றது³ன்னை உன்னி ।
நயக்கும் அவர்க்கிதி³ழுக்கென்ப³ர் ।
நல்லவர் என்ரு நைந்தே³ ॥ 1௦1 ॥
நையும் மனம் உன் குணங்கள³ை உன்னி ।
என் நா இருந்தெ³ம் ஐயன் இராமானுசன் ।
என்றழைக்கும் ।
அரு வினையேன் கையும் தொழும் கண்
கருதி³டு³ம் காண க்கட³ல் புடை³ சூழ் ।
வையம் இத³னில் ।
உன் வண்மை என்பா³ல் என் வளர்ந்த³து³வே ॥ 1௦2 ॥
வளர்ந்த³ வெங்கோ³ப³ மட³ங்க³ல் ஒன்றாய் ।
அன்ரு வாள் அவுணன் கிளர்ந்த³ ।
பொன் ஆக³ம் கிழித்தவன் ।
கீர்த்தி ப்பயிர் எழுந்து³ விளைந்தி³டு³ம்
சிந்தை³ இராமானுசன் எந்த³ன் மெய்வினை நோய் ।
களைந்து³ நன் ஞானம் அளித்தனந் ।
கையில் கனி என்னவே ॥ 1௦3 ॥
கையில் கனி என்ன க்கண்ணனை க்காட்டி த்தரிலும் ।
உந்த³ன் மெய்யில் பிறங்கி³ய ।
சீர் அன்றி வேண்டி³லன் யான் ।
நிரயத்தொய்யில் கிட³க்கிலும் சோதி³
விண் சேரிலும் இவ்வருள் நீ ।
செய்யில் தரிப்பன் ।
இராமானுச ! என் செழுங்கொ³ண்ட³லே ! ॥ 1௦4 ॥
செழுந்தி³ரை ப்பாற்கட³ல் கண் துயில் மாயன் ।
திருவடி³க்கீழ் விழுந்தி³ருப்பார் நெஞ்ஜில் ।
மேவு நன் ஞானி ।
நல் வேதி³யர்கள³் தொழும் திரு ப்பாத³ன்
இராமானுசனை த்தொழும் பெரியோர் ।
எழுந்தி³ரைத்தாடு³ம் இட³ம் ।
அடி³யேனுக்கிருப்பிட³மே ॥ 1௦5 ॥
இருப்பிட³ம் வைகு³ந்த³ம் வேங்க³ட³ம் ।
மாலிருஞ்ஜோலை என்னும் பொருப்பிட³ம் ।
மாயனுக்கென்ப³ர் நல்லோர் ।
அவை தம்மொடு³ம் வந்தி³ருப்பிட³ம் மாயன்
இராமானுசன் மனத்து ।
இன்றவன் வந்தி³ருப்பிட³ம் ।
எந்த³ன் இத³யத்துள்ளே தனக்கின்பு³றவே ॥ 1௦6 ॥
இன்பு³ட்ர சீலத்திராமானுச ।
என்ரும் எவ்விட³த்தும் என்பு³ட்ர நோய் ।
உட³ல் தோரும் பிறந்தி³றந்து³ ।
எண் அரிய துன்பு³ட்ரு வீயினும் சொல்லுவதொ³ன்ருண்டு³ ।
உன் தொண்ட³ர்க³ட்கே அன்பு³ட்ரிருக்கும் படி³ ।
என்னை ஆக்கி அங்கா³ட்படு³த்தே ॥ 1௦7 ॥
அங்க³யல் பாய் வயல் தென் அரங்க³ன் ।
அணி ஆக³மன்னும் பங்க³ய மாமலர் ।
பாவையை ப்போட்ருது³ம் ।
பத்தி எல்லாம் தங்கி³யதெ³ன்ன த்தழைத்து
நெஞ்ஜே ! நம் தலைமிசையே ।
பொங்கி³ய கீர்த்தி ।
இராமானுசன் அடி³ ப்பூ மன்னவே ॥ 1௦8 ॥
த³சக அடி³வரவு - பூ சீர் நிதி³ ஆண்டு³ மண் அடி³ கொழுந்து³ சார்ந்த³து சோர்வு
மருள் மயக்கு
இராமானுஜ நூட்ரந்தா³தி³ முற்றிற்று
திருவரங்க³த்தமுத³னார் திருவடி³கள³ே சரணம்