திருச்சிற்றம்பலம்
மந்திரம் ஆவது நீரு வானவர் மேலது நீரு
சுந்தரம் ஆவது நீரு துதிக்கப் படுவது நீரு
தந்திரம் ஆவது நீரு சமயத்தில் உள்ளது நீரு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருனீறே
வேதத்தில் உள்ளது நீரு வெந்துயர் தீர்ப்பது நீரு
போதன் தருவது நீரு புன்மை தவிர்ப்பது நீரு
ஒதத் தகுவது நீரு உண்மையில் உள்ளது நீரு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திருனீறே
முக்தி தருவது நீரு முனிவர் அணிவது நீரு
சத்தியம் ஆவது நீரு தக்கோர் புகழ்வது நீரு
பத்தி தருவது நீரு பரவ இனியது நீரு
சித்தி தருவது நீரு திரு ஆல வாயான் திருனீறே
காண இனியது நீரு கவினைத் தருவது நீரு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீரு
மாணந்த் தகைவது நீரு மதியைத் தருவது நீரு
சேணந்த் தருவது நீரு திரு ஆல வாயான் திருனீறே
பூச இனியது நீரு புண்ணியம் ஆவது நீரு
பேச இனியது நீரு பெருந்தவத் தோற்களுக்கெல்லாம்
ஆசைகெடுப்பது நீரு அந்தம தாவது நீரு
தேசம் புகழ்வது நீரு திரு ஆல வாயான் திருனீறே
அருத்தம தாவது நீரு அவலம் அருப்பது நீரு
வருத்தந்த் தணிப்பது நீரு வானம் அளிப்பது நீரு
பொருத்தம தாவது நீரு புண்ணியர் பூசும்வெண் நீரு
திருத்தகு மாளிகை சூழ்ந்தச் திரு ஆல வாயான் திருனீறே
எயிலது அட்டது நீரு இருமைக்கும் உள்ளது நீரு
பயிலப் படுவது நீரு பாக்கிய மாவது நீரு
துயிலைத் தடுப்பது நீரு சுத்தம தாவது நீரு
அயிலைப் பொலி தரு சூலத் தால வாயான் திருனீறே
இராவணன் மேலது நீரு எண்ணத் தகுவது நீரு
பராவண மாவது நீரு பாவம் அருப்பது நீரு
தராவண மாவது நீரு தத்துவம் ஆவது நீரு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருனீறே
மாலொ தயனறி யாத வண்ணமும் உள்ளது நீரு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீரு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்த் தருவது நீரு
ஆலமது உண்ட மிடற்றெம் மாலவாயான் திருனீறே
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது மேலுறை நீரு கருத இனியது நீரு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந்த் தகையது நீரு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆல வாயான் திருனீறே
ஆற்றல் அடல் விடை ஏரும் ஆல வாயான் திருனீற்றைப்
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னந் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே
திருச்சிற்றம்பலம்