View this in:
English Devanagari Telugu Tamil Kannada Malayalam Gujarati Odia Bengali  |
Marathi Assamese Punjabi Hindi Samskritam Konkani Nepali Sinhala Grantha  |

திருப்பாவை

த்⁴யானம்
நீளாதுங்க³ ஸ்தனகி³ரிதடீ ஸுப்தமுத்³போ³த்⁴ய க்ருஷ்ணம்
பாரார்த்²யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிர-ஸ்ஸித்³த⁴மத்⁴யாபயந்தீ ।
ஸ்வோச்சி²ஷ்டாயாம் ஸ்ரஜி-னிகள³ிதம் யா ப³லாத்க்ருத்ய பு⁴ங்க்தே
கோ³தா³ தஸ்யை நம இத³மித³ம் பூ⁴ய ஏவாஸ்து பூ⁴ய: ॥

அன்னவயல் புதுவை-ஆண்டாள் அரங்கற்கு,
பன்னு திருப்பாவை-ப்பல்பதியம்,
இன்னிசையால் பாடி-க்கொடுத்தாள் நற்-பாமாலை,
பூமாலை சூடி-க்கொடுத்தாளை ச்சொல்லு

சூடி-க்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்-பாவை,
பாடி-அருளவல்ல பல்வளையாய்!,
நாடினீ வேங்கடவற்கென்னை விதி என்ற இம்மாற்றம்,
நாம் கடவா வண்ணமே நல்கு.

1. பாஶுரம்
மார்கழி-த்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராட-ப்போதுவீர் போதுமினோ நேர் இழையீர்,
சீர்-மல்கும் ஆய்ப்பாடி-ச்செல்வ-ச்சிறுமீர்காள்,
கூர் வேல் கொடுன் தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி-ச்செங்கண் கதிர்-மதியம் போல் முகத்தான்,
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழ-ப்படிந்தேலோர் எம் பாவாய் ॥ 1 ॥

2. பாஶுரம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு,
செய்யும் கிரிசைகள் கேளீரோ,
பாற்கடலுள் பைய-த்துயின்ற பரமன்-அடி பாடி,
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீர் ஆடி,
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம் பாவாய் ॥ 2 ॥

3. பாஶுரம்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,
நாங்கள் நம் பாவைக்கு ச்சாற்றி நீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெறுஞ்சென்னெல் ஊடு கயல் உகள,
பூங்குவளை ப்போதில் பொறிவண்டு கண் படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க,
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம் பாவாய் ॥ 3 ॥

4. பாஶுரம்
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்,
ஆழி உள் புக்கு முகந்து கொடார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து,
பாழியன் தோளுடை ப்பற்பனாபன் கையில்,
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய்,
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம் பாவாய் ॥ 4 ॥

5. பாஶுரம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருனீர் யமுனை த்துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,
தாயை க்குடல் விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி த்தொழுது,
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம் பாவாய் ॥ 5 ॥

6. பாஶுரம்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்,
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ,
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,
கள்ள ச்சகடம் கலக்கழிய க்காலோச்சி,
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்து க்கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள எழுந்தரி என்ற பேர் அரவம்,
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய் ॥ 6 ॥

7. பாஶுரம்
கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன்,
கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய் ப்பெண்ணே,
காசும் பிறப்பும் கல கலப்ப க்கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர்,
மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ,
நாயக ப்பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி,
கேசவனை ப்பாடவும் நீ கேட்டே கிடத்தியோ,
தேசம் உடையாய்! திறவேலோர் எம் பாவாய் ॥ 7 ॥

8. பாஶுரம்
கீழ்வானம் வெள்ளென்றெருமை சிறு வீடு,
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்,
போவான் போகின்றாரை ப்போகாமல் காத்து,
உன்னை க்கூவுவான் வந்து நின்றோம்,
கோது கலம் உடைய பாவாய்! எழுந்திராய் பாடி ப்பறை கொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய,
தேவாதிதேவனை ச்சென்று நாம் சேவித்தால்,
ஆவா என்றாராய்ந்தருளேலோர் எம் பாவாய் ॥ 8 ॥

9. பாஶுரம்
தூமணி மாடத்து ச்சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ த்துயில் அணைமேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணி க்கதவம் தாள் திறவாய்,
மாமீர்! அவளை எழுப்பீரோ,
உன் மகள் தான் ஊமையோ அன்றி ச்செவிடோ அனந்தலோ,
ஏம ப்பெருன் துயில் மந்திர ப்பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோர் எம் பாவாய் ॥ 9 ॥

1௦. பாஶுரம்
நோற்று ச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்,
நாற்ற த்துழாய் முடி நாராயணன்,
நம்மால் போற்ற ப்பறை தரும் புண்ணியனால்,
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்,
தோற்றும் உனக்கே பெருன் துயில் தான் தந்தானோ,
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே,
தேற்றமாய் வந்து திறவேலோர் எம் பாவாய் ॥ 1௦ ॥

11. பாஶுரம்
கற்று க்கறவை க்கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழிய ச்சென்று செரு ச்செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே,
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து த்தோழிமார் எல்லாரும் வந்து,
நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட,
சிற்றாதே பேசாதே செல்வ ப்பெண்டாட்டி,
நீ எற்றுக்குறங்கும் பொருளேலோர் எம் பாவாய் ॥ 11 ॥

12. பாஶுரம்
கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி,
நினைத்து முலை வழியே நின்று பால் சோர,
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்,
பனி த்தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென் இலங்கை க்கோமானை ச்செற்ற,
மனத்துக்கினியானை ப்பாடவும் நீ வாய் திறவாய்,
இனி த்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்,
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம் பாவாய் ॥ 12 ॥

13. பாஶுரம்
புள்ளின் வாய் கீண்டானை ப்பொல்லா அரக்கனை,
கிள்ளி க்களைந்தானை க்கீர்த்திமை பாடி ப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவை க்களம் புக்கார்,
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று,
புள்ளும் சிலம்பின காண் போதரி க்கண்ணினாய்,
குள்ள க்குளிர க்குடைந்து நீர் ஆடாதே,
பள்ளி க்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம் பாவாய் ॥ 13 ॥

14. பாஶுரம்
உங்கள் புழைக்கடை த்தோட்டத்து வாவியுள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்தாம்பல் வாய் கூம்பின காண்,
செங்கல் பொடி க்கூரை வெண்பற் தவத்தவர்,
தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்,
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்,
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்,
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்,
பங்கய க்கண்ணானை ப்பாடேலோர் எம் பாவாய் ॥ 14 ॥

15. பாஶுரம்
எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ,
சில் என்றழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்,
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக,
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்,
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை,
மாயனை ப்பாடேலோர் எம் பாவாய் ॥ 15 ॥

16. பாஶுரம்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!,
கொடி த்தோன்றும் தோரண வாயில் காப்பானே!,
மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு,
அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயில் எழ ப்பாடுவான்,
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா,
நீ நேய நிலை க்கதவம் நீக்கேலோர் எம் பாவாய் ॥ 16 ॥

17. பாஶுரம்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்,
எம் பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்,
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்,
அம்பரம் ஊடறுத்தோங்கி உலகளந்த,
உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்,
செம் பொற் கழல் அடி ச்செல்வா பலதேவா!,
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம் பாவாய் ॥ 17 ॥

18. பாஶுரம்
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்,
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!,
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்,
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்,
மாதவி ப்பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனந் பேர் பாட,
செந்தாமரை க்கையால் சீரார் வளை ஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம் பாவாய் ॥ 18 ॥

19. பாஶுரம்
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி,
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்,
வைத்து க்கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்!,
மை த்தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை,
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்!,
எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோர் எம் பாவாய் ॥ 19 ॥

2௦. பாஶுரம்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்,
செப்பம் உடையாய்! திறல் உடையாய்,
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்,
செப்பன்ன மென் முலை ச்செவ்வாய் ச்சிறு மருங்குல்,
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்,
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம் பாவாய் ॥ 2௦ ॥

21. பாஶுரம்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்,
ஆற்ற ப்படைத்தான் மகனே! அறிவுறாய்,
ஊற்றம் உடையாய்! பெரியாய்!,
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்,
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற் கண்,
ஆற்றாது வந்துன் அடி பணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம் பாவாய் ॥ 21 ॥

22. பாஶுரம்
அங்கண் மா ஞாலத்தரசர்,
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல் வந்து தலை ப்பெய்தோம்,
கிங்கிணி வாய் ச்செய்த தாமரை ப்பூ ப்போலே,
செங்கண் சிறு ச்சிறிதே எம்மேல் விழியாவோ,
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம் பாவாய் ॥ 22 ॥

23. பாஶுரம்
மாரி மலை முழைஞ்சில் மன்னி க்கிடந்துறங்கும்,
சீரிய சிங்கம் அறிவுற்று த்தீ விழித்து,
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கி ப்புறப்பட்டு,
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா,
உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளி,
கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து,
யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோர் எம் பாவாய் ॥ 23 ॥

24. பாஶுரம்
அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்றங்கு த்தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்ற ச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி,
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி,
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி,
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி,
என்றென்றுன் சேவகமே ஏத்தி ப்பறை கொள்வான்,
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம் பாவாய் ॥ 24 ॥

25. பாஶுரம்
ஒருத்தி மகனாய் ப்பிறந்து,
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலான் ஆகி த்தான் தீங்கு நினைந்த,
கருத்தை ப்பிழைப்பித்து க்கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே,
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம் பாவாய் ॥ 25 ॥

26. பாஶுரம்
மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சஜன்னியமே,
போல்வன சங்கங்கள் போய் ப்பாடுடையனவே,
சால ப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோர் எம் பாவாய் ॥ 26 ॥

27. பாஶுரம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!,
உன் தன்னைப்பாடி ப்பறை கொண்டு யாம் பெறு சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள் வளையே தோடே செவி ப்பூவே,
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்,
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு,
மூட நெய் பெய்து முழங்கை வழிவார,
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய் ॥ 27 ॥

28. பாஶுரம்
கறவைகள் பின் சென்று கானஞ்சேர்ந்துண்போம்,
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து,
உன் தன்னை ப்பிறவி பெறுந்தனை ப்புண்ணியம் யாம் உடையோம்,
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா,
உன் தன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது,
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்,
உன் தன்னை ச்சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம் பாவாய் ॥ 28 ॥

29. பாஶுரம்
சிற்றம் சிறுகாலே வந்துன்னை ச்சேவித்து,
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்,
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து,
நீ குற்றேவல் எங்களை க்கொள்ளாமல் போகாது,
இற்றை ப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்,
உன் தன்னோடுற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்,
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய் ॥ 29 ॥

3௦. பாஶுரம்
வங்க க்கடல் கடைந்த மாதவனை க்கேசவனை,
திங்கள் திருமுகத்து ச்சேயிழையார் சென்றிறைஞ்சி,
அங்க ப்பறை கொண்டவாற்றை,
அணி புதுவை ப்பைங்கமல த்தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன,
சங்க த்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கிப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரை த்தோள்,
செங்கண் திருமுகத்து ச்செல்வ த்திருமாலால்,
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம் பாவாய் ॥ 3௦ ॥

ஆண்டாள் திருவடிகளே சரணம் பெரியாழ்வார் திருவடிகளே சரணம்




Browse Related Categories: